தமிழ்நாடு

அண்ணாமலைப் பல்கலை மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பதக்கங்கள் வென்ற பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஆளுநர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தனாா் பிறந்த ஊரான ம.ஆதனூா் கிராமத்துக்கு சென்று நந்தனாா் குருபூஜை விழாவில் பங்கேற்றார். 

பின்னர் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக 85 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா். இரவில் காா் மூலம் புதுச்சேரி வழியாக சென்னை செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT