தமிழ்நாடு

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் 23-10-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 28) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில்  மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT