திருப்பூரில் இளம் பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலனும் தற்கொலை முயற்சி
திருப்பூரில் இளம் பெண்ணை கழுத்து அறுத்துக் கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் இளம் பெண்ணை கழுத்து அறுத்துக் கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் சத்தியஸ்ரீ (20). இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (25) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | 50 வயதானோர் பணி நீக்கம்: திருமுருகன்பூண்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
Advertisement
Advertisement
இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நரேந்திரன் அவருடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாஸ்ரீயின் கழுத்தை அறுத்துள்ளார். இதன் பின்னர் நரேந்திரனும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சத்தியஶ்ரீயைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்தாகத் தெரிவித்தார்.
திருப்பூரில் பட்டப்பகலில் இளம் பெண் கத்தியால் அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.