தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

DIN

தூத்துக்குடி: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில், 1 கோடி மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இத்திட்ட தொடக்க விழா தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தலைமை வகித்தார், மேயர் ஜெகன் பெரியசாமி, ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இவ்விழாவுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை பயனாளிகளுக்கு வழங்கினார். 

இந்நிகழ்வில், சார் ஆட்சியர் கௌரவ் குமார்,  மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா உள்பட பல பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT