சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயன் இல்லை: கே.அண்ணாமலை
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயன் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயன் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயன் இல்லை. மத்திய அரசுடன் இணைந்து புதியதாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் பாஜக ஆதரிக்கும். இத்திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது.
ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12% வருமானம் தர வேண்டும். சேதுசமுத்திர திட்டத்தால் வருமானம் இருக்காது. சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வந்தால் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் தரும். திமுக எம்பி-கள் கனிமொழி, பாலு நடத்தும் நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் பெரும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க- சரத் யாதவின் மகளுக்கு ராகுல் காந்தி ஆறுதல்!
அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதல்வர் கூறுவது தவறானது. இத்திட்டம் தொடர்பாக பாஜகவின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும். பேரவையில் கொண்டுவரப்பட்ட சேது சமுத்திரத் திட்ட தீர்மானத்தில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன். புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.