முகப்பு
தமிழ்நாடு

கடலூர் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

கடலூர் மாவட்ட மீனவர்கள் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

Updated On : 3 ஜூலை 2023, 3:21 pm IST
கோப்புப் படம்
பகிர்:

நெய்வேலி: கடலூர் மாவட்ட மீனவர்கள் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆகவே, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments