அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக அதிமுக வழக்கு!
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நிர்வாக காரணத்திற்காக செந்தில் பாலாஜியின் துறைகள் மட்டும் பிற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு துறையில்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | குறைந்துவரும் நேரம்: சப்தம் வந்த இடத்தில் டைட்டன் நீா்முழ்கி இல்லை
இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக, தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.