முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை செல்லும்: உயர்நீதிமன்றம்
மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வதிக்கப்பட்டிருந்தது. 2000-ல் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையிட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர் 2015-ல் காலமானார்.
இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
Advertisement
Advertisement
அதில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அத்துடன் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.