கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டிக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி கிராமத்தில் அய்யனார் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் அருகே உள்ள கண்மாயில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | கோட்டயம் - சென்னை சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம்!
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ்-சுலோச்சனா தம்பதி மகன் அருண் பாரதி (20) என்பது தெரிய வந்தது.
இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும், முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.