ஜெயக்குமார்
ஜெயக்குமார் 
தமிழ்நாடு

‘கொள்கையாவது, வெங்காயமாவது..’: ராமதாஸை சாடிய ஜெயக்குமார்!

Ravivarma.s

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் ஒரு மாதத்துக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, இறுதியில் பாஜக கூட்டணியில் இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதனிடையே, பாமக மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே பிரசாரத்தின்போதும், செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் தொடர்ந்து வார்த்தை போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியதாவது:

“ஜெயலலிதா இல்லையென்றால் பாமக வெளியே தெரிந்து இருக்காது. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் அவர்கள். பாமக தொடங்கும்போது அரசுப் பதவிக்கு வரமாட்டோம், வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று ராமதாஸ் கூறினார். அவரது மருமகள் தேர்தலில் நிற்கிறார். மகன் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

ஜெயலலிதாதான் அன்புமணியை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்கதான் விரும்பினார்கள். தொகுதிகள், மற்றவைக்கான பேரம் அதிகமாகும் இடத்தில்தான் ராமதாஸ் உடன்படுவாரே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது.. எதுவும் அவருக்கு கிடையாது.

பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது அதிமுக. சட்டப்பேரவையில் 5 எம்எல்ஏக்களை கொண்ட பாமகவால் தனியாக நின்று ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது.” என்று விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT