கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் மின் நுகர்வு புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் மின் நுகர்வு புதிய உச்சத்தை இன்று எட்டி இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

DIN

தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை இன்று எட்டி இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார். இது குறித்து மேலும், அவர் தெரிவித்ததாவது:

"தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை இன்று எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு இன்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது.

இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

மத்திய கல்வி அமைச்சகம் முன் என்எஸ்யுஐ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT