தமிழ்நாடு

தி.மு.க வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Sasikumar

தேர்தல் விளம்பரம் தொடர்பான திமுக தொடர்ந்து வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் விளம்பரம் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி ஏப்ரல் 4ஆம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என ஏப்ரல் 17ஆம் தேதி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT