தமிழ்நாடு

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

DIN

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு அது ஆபத்தாக அமைந்து விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு அது ஆபத்தாக அமைந்து விடும். மக்களவைத் தொகுதிகளை குறைத்து விடுவார்கள். தற்போது 39 மக்களவை தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குள் 31 மக்களவை தொகுதிகள் மட்டுமே இருக்கும்.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை, மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கும் பிற மாநிலங்களுக்குமான தண்டனையாகப் பார்க்க வேண்டும். மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பாஜக அரசு செல்லாக் காசாக்கி விடும்! இது ஜனநாயகத்துக்கு ஆபத்து!

தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளை குறைக்கப் போவதில்லை என பிரதமர் மோடி மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். ஆகவே, தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்! என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT