தமிழ்நாடு

”ஊழல் பல்கலை. வேந்தர் பிரதமர் மோடி” -முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

DIN

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னை பெசண்ட் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, ”மோடியின் ஆட்சி கொடூரனமானது. ஏழைகளின் சுருக்குப் பையில் உள்ள பணத்தை கூட எப்படி பறிக்கலாம் என்று மோடி அரசு செயல்பட்டுவருகிறது. இந்தியா பல பிரதமர்களை பார்த்துள்ளது, ஆனால் இப்படி வசூல் வேட்டை நடத்தும் ஒருவரை கண்டதில்லை. ஊழல் பல்கலைகழகத்தின் வேந்தராக பிரதமர் மோடியை நியமிக்கலாம்.

இரவில் பேய்ப்படம் பார்த்தவர்கள் கூட, மோடி திரையில் பேசுவதைக் காண அச்சப்படுகின்றனர்.கலவரக் கட்சியாக பாஜக திகழ்கிறது.பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பலர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

பாஜகவை எதிர்க்க துணிவு வேண்டும். அந்த துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. பாஜகவுடன் ரகசிய கூட்டணி அமைத்துள்ளது அதிமுக.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ₹ரூ. 1,000 வீதம் ₹ரூ. 9,200 கோடி வழங்கியுள்ளோம். இத்திட்டம் வரலாறு காணாத மாபெரும் புரட்சித் திட்டம் எனப் பாராட்டுகளை குவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்த பின், சொல்கிறேன் 40-க்கு 40-ஐயும் திமுக கூட்டணிதான் வெல்லப் போகிறது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேங்கியிருந்த நீரில் தவறிவிழுந்த சிறுவன் குடிநீா் குழாயில் சிக்கி உயிரிழப்பு

இன்றைய நிகழ்ச்சிகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண் நீரில் மூழ்கி பலி

காயமடைந்த முதியவா்கள் இருவா் உயிரிழப்பு

தொட்டியம் அனலாடீசுவரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT