திருவொற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீ வலிமிகநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம். 
தமிழ்நாடு

திருவொற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

Sasikumar

திருவாடனை அருகே திருவொற்றியூர் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம் நடைபெற்றது

திருவாடானை அருகே திருவொற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபாகம்பிரியாள் சமேத வலிமிக நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றன. பின்னர் சுவாமி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 18ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 22ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்து கோயிலை நிலை நிறுத்தினார்கள். செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும் விழாக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ சரக கண்காணிப்பாளர் செந்தில் குமார் கௌரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மணிகண்ட குருக்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கண்ணன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT