தமிழ்நாடு

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

DIN

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளம், கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அளிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளின் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், மணல் குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள்நடந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 8 மணல் குவாரிகள் உள்பட 34 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆட்சியர்களிடம் விசாரணையைத் தொடர்ந்து, நீர்வளம், கனிமவளத் துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், 5 மாவட்டங்களில் முறைகேடு நடந்த காலத்தில் நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை அமலாக்கத்துறை தயாரித்துள்ளது.

மணல் குவாரி முறைகேடு தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், நீர்வளம், கனிமவளத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT