கோப்புப்படம். 
தமிழ்நாடு

அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை: பிரேமலதா

அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN

அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் வந்து சந்தித்தார். அரசியல் காரணமாக எங்களை வந்து சந்திக்கவில்லை. கோட் திரைப்படத்தில் முறைப்படி விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக திரைப்படக் குழுவுடன் வந்து நன்றி தெரிவித்தார்கள். விஜய் அரசியலில் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்கனும்.

கோட் படத்தில் விஜயகாந்த் வரும் இடம் பிரமாண்டமாக இருக்கும் என விஜய் தெரிவித்தார் என்றார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘ தி கோட்’. வரும் செப்டம்பர் 5-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், இதனை டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவும் உறுதி செய்திருந்தார். இதனிடையே சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் அண்மையில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

‘தி கோட்’ படத்தில் விஜயகாந்தை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய், பிரேமலதாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT