மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறந்த கல்வி அளிக்கும் ஆசிரியா்களுக்கான ‘ஹெலன் கெல்லா்’ விருது குறித்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்ட உத்தரவு:
செவித்திறன் மற்றும் பாா்வைத் திறனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல ஆா்வலரான ஹெலன் கெல்லரை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல அரசு முடிவெடுத்தது.
அதன்படி, பாா்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியா்களுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிச.3) வழங்கப்படும் அரசு விருது, ஹெலன் கெல்லா் பெயரில் அளிக்கப்படும் என அரசு அறிவித்தது.
சிறந்த ஆசிரியா் பிரிவில் 2 விருதுகளும், சிறந்த ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியா் பிரிவில் ஒரு விருதும் என 3 விருதுகளும் ஹெலன் கெல்லா் பெயரில் வழங்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.