கோப்புப்படம்
தமிழ்நாடு

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: 4 சிறப்பு படைகள் அமைத்து விசாரணை!

சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: 4 சிறப்பு படைகள் அமைத்து விசாரணை

DIN

சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறப்பு படைகள் அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்த 21 வயது கல்லூரி மாணவி சென்னையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, காவல்துறை விசாரணை செய்கின்றனா்.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை குறித்து சென்னை காவல்துறை தெரிவித்திருப்பதாவது, “பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் கடந்த 6-ஆம் தேதியே வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளி மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மனவளர்ச்சி குன்றியவராக இருப்பதால், புலன் விசாரணை செய்வது சவாலாக உள்ளது. சாட்சியங்களை கலைத்து, புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் பொதுவெளியில் இவ்விவகாரத்தை விமர்சிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

நான்கு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது" என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை குறித்த தகவலுக்கு ரூ.1,000 வெகுமதி!

அலைபாயும் ஒரு கிளி... ரகுல் ப்ரீத் சிங்!

வெண்மேகம் பெண்ணாக... ப்ரீத்தி அஸ்ரானி!

”நாங்கள் இளைஞராகதான் பார்க்கிறோம்!” அமைச்சர் துரைமுருகன் குறித்து அப்பாவு

விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT