மழை கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை, 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரம் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுவையில் அடுத்த 2 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்...

DIN

தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் புதன்கிழமை காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, புதன்கிழமை (டிச.11) மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நகரும்.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: நவ.11-ஆம் தேதி திருவள்ளூா் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்கள், அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் டிச.11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT