முகப்பு
தமிழ்நாடு

கேரம் வீராங்கனைக்கு தாமதமாக பரிசு வழங்கியது ஏன்? உதயநிதி விளக்கம்

3 தங்கப் பதக்கங்கள் வென்ற கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

Updated On : 18 டிசம்பர் 2024, 3:14 pm IST
வீராங்கனை காசிமா
பகிர்:

தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனைகளின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகை வழங்குவோம் என்று அவர்களை நேரில் வாழ்த்தியபோதே அறிவித்திருந்தோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனை காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலுடன் புகைப்படங்களையும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

அதில், விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட தமிழக அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை காசிமா உள்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்துவிட்டு தாயகம் திரும்பியிருந்தார்.

அவரைப்போலவே, வீராங்கனை மித்ரா 2 தங்கம், வீராங்கனை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.

எனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, வீராங்கனை எம்.காசிமாவுக்கு ரூ.1 கோடியும், வி.மித்ராவுக்கு ரூ.50 லட்சமும், கே.நாகஜோதிக்கு ரூ.50 லட்சமும் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கியுள்ளோம்.

வீராங்கனைகள் மூவரும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் திமுக தலைமையிலான அரசு துணை நிற்கும். அவர்களுக்கு அன்பும் வாழ்த்தும் என்று பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments