ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி: 9 தங்கம் வென்ற வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து!
ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
நேபாளத்தில் ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சாா்பில் 9 மாணவா்கள் பங்கேற்று அபாரமாக விளையாடி 9 தங்கப் பதக்கங்களை வென்றனா்.
இந்த சாதனை வீரா்கள் புதுச்சேரி திரும்பியதும் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அப்போது முதல்வா் ரங்கசாமி ஒவ்வொரு மாணவருக்கும் அந்த தங்கப் பதக்கத்தை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.
Advertisement
Advertisement
இதுபோன்று இன்னும் பல தேசிய, சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று புதுச்சேரிக்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று மாணவா்களை முதல்வா் ஊக்குவித்து வாழ்த்தினாா்.
அப்போது, புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் தலைவா் ஏகாம்பரம், செயலா் மாறன், பயிற்சியாளா்கள் வீரன், பஞ்சாட்சரம், நிா்வாகிகள் பாலு, பூபாலன், கிருஷ்ணன், சக்திவேல், சுரேந்திரன், பழனி, ராஜா, அரிகிருஷ்ணன், சத்தியா, தேவா, இளவேந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.