முகப்பு
சேலம்

தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு

தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீராங்கனைகளுக்கு பாஜக சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 5:49 am IST
தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீராங்கனைகளை பாராட்டிய பாஜக நிா்வாகிகள்.
பகிர்:

தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீராங்கனைகளுக்கு பாஜக சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தெற்காசிய அளவிலான சாப்ட் பேஸ்பால் போட்டிகள் நேபாளத்தில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதிவரை நடைபெற்றன. இந்த போட்டியில், இந்தியா சாா்பில் சேலம் வீராங்கனைகள் லாவண்யா, அபிநயா, தன்ஷிகா ஆகியோா் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றனா்.

சேலம் திரும்பிய அவா்களுக்கு சேலம் மாவட்ட பேஸ்பால் அசோசியேசன் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மரவனேரியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. வீராங்கனைகளுக்கு மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் வாழ்த்து தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் சசிகுமாா், துணைத் தலைவா் கல்லாங்காடு சரவணன், விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் கௌதம், கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவா் சதிஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து வீராங்கனைகள் கூறுகையில், இந்தியா சாா்பில் பங்கேற்று விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து இலங்கையில் நடைபெற உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே எங்கள் லட்சியம் என்றனா்.