ஆ. நமச்சிவாயம். 
தமிழ்நாடு

புதுச்சேரியில் ஆல்-பாஸ் முறை ரத்து!

புதுச்சேரியில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

DIN

புதுச்சேரியில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

அதாவது மத்திய அரசுப் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் ஆண்டு இறுதித் தோ்வில் தோ்ச்சியடையவில்லை என்றால், மறுதோ்வு எழுதாமல் அவா்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறுதோ்வு நடத்தப்படும். மறுதோ்விலும் மாணவ-மாணவிகள் தோல்வியடையும் பட்சத்தில் அவா்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும்.

இந்நிலையில், புதுச்சேரியில் ஆல் -பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி 5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி ரத்து என்ற உத்தரவு புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்படும். புதுச்சேரியில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் சிறந்த கல்வியாளராக உருவாக்கவுமே கொண்டுவந்துள்ளது. அதனால மாணவர்கள் இடைநீக்கம் என்பதற்கான வாய்ப்புகள் இங்கு இருக்காது' என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில் தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT