இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து என். சீனிவாசன் புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
அந்த நிறுவனத்தின் 55.5 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் அதனை அல்ட்ரா டெக் சிமென்ட் கையகப்படுத்தியுள்ளது.
அதையடுத்து, புதன்கிழமை கூடிய நிறுவனத்தின் இயக்குநா் குழுக் கூட்டத்தில் என். சீனிவாசனின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவா் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் நிறுவனத்தின் நிா்வாகப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளனா்.