முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (டிச. 30) சந்தித்துள்ளார்.

Updated On : 30 டிசம்பர் 2024, 6:59 pm IST
ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்த அண்ணாமலை
பகிர்:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (டிச. 30) சந்தித்தார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் திமுகவைச் சேர்ந்தவர் என தொடர்ந்து பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆளுநரை சந்தித்து அண்ணாமலை மனு அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை ஆளுநரை சந்தித்து மனு அளித்திருந்தார். அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது அண்ணாமலையும் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க | அறவழியில் மக்களைச் சந்தித்தவர்களை கைது செய்வதா? - விஜய் கண்டனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.