தமிழ்நாடு

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்: மாநகர போக்குவரத்துக் கழகம்

DIN


சென்னை: சென்னையில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாநாகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதிறது. 

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். 

மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட வேண்டும்.

மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொறுத்தப்பட வேண்டும். 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் அவர்களுக்கு தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயண் செய்தால் பேருந்து சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பிறகு பேருந்தை இயக்க வேண்டும்.

அறிவுரைக்கு பின்பும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையில் புகார் அளிக்க வேண்டும்.

பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்குவதற்கு தயார்ப்டுத்த வேண்டும்.

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT