நடிகர் விஜய் 
தமிழ்நாடு

புதிய அரசியல் கட்சி தொடக்கம் -வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார்.

DIN

நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக கடந்த வெள்ளியன்று(பிப்.2) அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக  திரைத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் பிற விஐபிக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள் மற்றும் ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி“ என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

எம்பிக்கள் குடியிருப்பில் தீ விபத்து!

நிச்சயதார்த்தம் உண்மையா? வதந்தியா? ரஷ்மிகா மந்தனா பதில்!

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

SCROLL FOR NEXT