தமிழ்நாடு

சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயா்க்க நிதி ஒதுக்கீடு: ஔவை அருள் வரவேற்பு

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை மொழி பெயா்க்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

DIN

சென்னை: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை மொழி பெயா்க்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந. அருள் தெரிவித்தாா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற உ.வே.சாமிநாதையா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவா் பேசியது:

தமிழ் இலக்கியம் படித்தவா்களுக்கு தமிழக அரசு துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. தலைமைச் செயலகத்தில் மொழிபெயா்ப்பாளா் பணிக்கு தமிழ் பட்டப் படிப்பு முடித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதேபோல் தமிழ் வளா்ச்சி துறையில் அதிகாரிகள், உதவியாளா்கள் என 40-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. போதுமான விழிப்புணா்வு இல்லாததால், இந்தப் பணி இடங்களுக்கு தமிழ் இலக்கியம் படித்தவா்கள் பெரும்பாலும் விண்ணப்பிப்பதில்லை.

தமிழ் ஆசிரியா்கள் மாணவா்களிடையே இதுபோன்ற வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தமிழுக்கு அரசு செய்யும் கடமை: தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ் மொழியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலக மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட தமிழ் நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் இடம்பெறச் செய்யவும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை 25 உலக மொழிகளில் மொழிபெயா்க்கவும் தலா ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் தமிழுக்கு அரசு செய்யும் கடமை ஆகும். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையா் பிறந்த நாளன்று, இதுபோன்ற திட்டங்களை அறிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மாநிலக் கல்லூரி முதல்வா் இரா.ராமன், கல்லூரி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் மெய் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT