தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி: மோடி

DIN

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

தமிழ்மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மொழி தமிழ்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. எந்த வளர்ச்சியுமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தும் திமுக எதையும் தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கொடுக்கப்பட்டதை விட தேசிய ஜனநாயக கூட்டணி 3 மடங்கு அதிக நிதி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் பாஜகவில் பலம் அதிகரிக்கும். தமிழகத்தில் பாஜகவின் மீது பெரும் நம்பிக்கை வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி இல்லாவிட்டாலும், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர் பாஜகவின் வளர்ச்சியை தடுக்கின்றனர். ஏழை மக்கள் அனைவருக்குமானதாக பாஜக செயல்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

SCROLL FOR NEXT