நெல்லையில் பிரதமர் மோடி உரை 
தமிழ்நாடு

அல்வாவைப் போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள்: பிரதமர்

நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். அல்வாவை போலவே நெல்லை மக்களும் இனிமையானவர்கள்.

DIN

நெல்லையில் பாளையங்கோட்டையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

முன்னதாக தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.

அதன்பின்னர், நெல்லையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியது,

நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். அல்வாவைப் போலவே நெல்லை மக்களும் இனிமையானவர்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதியம்மன் நல்லாசி தர வேண்டும்.

நேற்று திருப்பூர், மதுரையில் மக்களைச் சந்தித்தேன். இன்று நெல்லை மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம், எதிர்காலத்தைப் பற்றி மிகவும் தெளிவாக இருப்பார்கள்.

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு கிடைக்கும் மதிப்பு அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வெளிநாடுகளுடன் இந்தியா போட்டிப் போடுகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் மூலம் 40 லட்சம் பெண்கள் சமையல் எரிவாயு பெற்றுள்ளனர்.

எனது திட்டங்களால் பயனடைந்த பெண்கள் எனக்கு ஆசி வழங்குகிறார்கள். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி வரை சென்று சேருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT