மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் - உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முதல்வர் ஸ்டாலின்

உலக முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

உலக முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மநாட்டில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஒரு ட்ரில்லியன் பொருளாதார கனவை எட்ட முதலீட்டாளர் மாநாடு சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

உலக முதலீட்டாளா் மாநாடு, சென்னையில் வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 100-க்கும் அதிகமான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளைத் திரட்டவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT