கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் கரும்பின் விலை ரூ. 33: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் கரும்பின் விலை ரூ. 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

DIN

பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் கரும்பின் விலை ரூ. 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனைத் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரும்பு உயரம் 5 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.

கூட்டுறவுத்துறை உடன் இணைந்து வேளாண் துறை அதிகாரிகள் எந்தெந்த பகுதியில் கரும்பு உள்ளது என்பதை அடையாளம் காட்டுவார்கள். 

எந்தவித முறைகேடும் இல்லாத வகையில் கரும்பு கொள்முதல் நடைபெறும். இடைத்தரகர்கள் கண்டிப்பாக கரும்பு கொள்முதலில் ஈடுபடுவது தவிர்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT