தமிழ்நாடு

அவனியாபுரம்  ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது.

DIN


மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இதில், மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை அவனியாபுரத்திலும், செவ்வாய்க்கிழமை பாலமேட்டிலும், புதன்கிழமை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 

அவனியாபுரம் போட்டியில் பங்கேற்க 1000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு வில்லை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்கும் விழா நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி விதிமுறைகளுக்கு உள்பட்டு பங்கேற்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அவனியாபுரத்தில் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் தலா ஒரு கார் பரிசளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT