திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காக ஜன. 24 மற்றும் ஜன. 25 ஆகிய நாள்களில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை, புதுச்சேரி - திருவண்ணாமலை, கடலூர்/பண்ருட்டி, திருக்கோவிலுர், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை, வேலூர் - திருவண்ணாமலை, திருப்பத்தூர் - திருவண்ணாமலை, ஆரணி/ஆற்காடு - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மாநில மகளிர் கொள்கை: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
குடியரசு நாள், தைப்பூசம் என தொடர் விடுமுறை நாள்கள் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.