சென்னை: 150 தாழ்தளப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஆணை பேருந்து உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி: பயணிகளின் பேருந்து சேவையை பூா்த்தி செய்யவும், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயணிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ரூ.135.48 கோடி மதிப்பிலான 150 புதிய தாழ்தள பேருந்துகளை தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் கொள்முதல் செய்யத் திட்டமிட்டு, அதற்கான ஆணை உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 26 பேருந்துகளும், சேலத்துக்கு 16 பேருந்துகளும், கோவைக்கு 20 பேருந்துகளும், கும்பகோணத்துக்கு 38 பேருந்துகளும், மதுரைக்கு 33 பேருந்துகளும், திருநெல்வேலிக்கு 17 பேருந்துகளும் ஆக மொத்தம் 150 புதிய தாழ்தளப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.