விஜயகாந்த் படத்துக்கு மரியாதை செலுத்திம் நெப்போலியன் 
தமிழ்நாடு

விஜயகாந்துக்கு மரியாதை செலுத்திய நெப்போலியன்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

DIN

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடல்நலக் குறைவால் டிசம்பர் 28-ஆம் தேதி மறைந்த விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமானோா் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

அமெரிக்காவில் இருந்த நெப்போலியன் தற்போது இந்தியாவந்துள்ள நிலையில், விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று மரியாதை அவருக்கு செலுத்தினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் இன்று (ஜூலை 9) சென்றார். அங்கு விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரின் மனைவியும் விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை நெப்போலியனிடம் காண்பித்து பிரேமலதா விவரித்தார். இது தொடர்பான விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

விஜயாந்த்தோடு பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது என நடிகர் நெப்போலியன் தனது இரங்கல் குறிப்பில் விஜயகாந்த் குறித்து தெரிவித்திருந்தார்.

விஜயகாந்த் மறைந்தபோது அவரால் இந்தியா வரமுடியாத நிலையில், தற்போது அவருக்கு மரியாதை செலுத்தினார் நெப்போலியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT