தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்காக ஜூன் 23-இல் நடைபெற்ற நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் மறுதேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மாணவர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட நுழைவுத் தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்புக் கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவா் பட்டப் படிப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 பேரும், முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 380 பேரும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தவா்கள் ஜூன் 23-இல் நடைபெற்ற முதுநிலை நுழைவுத் தோ்வில் கலந்து கொண்டனா்.
இந்த நுழைவுத் தோ்வில் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், குஜராத், ஜாா்க்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றிருந்தனா்.
இந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.