FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு!

அடுத்த மூன்று மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என தெரிந்துகொள்வோம்.

26 ஜூன் 2024, 11:20 am IST
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை கேரளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது.

அந்தவகையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பகலில் நல்ல வெயிலும், இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பூமி குளிர்ந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments