இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 
தமிழ்நாடு

புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும்: இரா.முத்தரசன்

புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Din

புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை மக்களுக்கு விரோதமான முறையில் மத்திய அரசு மாற்றியமைத்து, புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இவற்றுக்கு வழக்கொழிந்த சம்ஸ்கிருத மொழியில் பெயரிட்டு, அதே மொழி தலைப்புகளைத்தான் இந்தியா முழுமையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து இந்தச் சட்டங்களை செயல்படுத்துவதென அறிவித்துள்ளது.

இதுபற்றி விவாதித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு, ‘இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-க்கு எதிரான நடவடிக்கை. இதை உடனடியாக நிறுத்திவைத்து, முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு தன்னிச்சையாக நிறைவேற்றிய இந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, வழக்குரைஞா்கள் நடத்தும் தொடா் போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT