கோப்புப் படம்.
தமிழ்நாடு

சென்னை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை!

இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

தமிழகத்தில் ஞாயிறு(ஜூன் 30) அதிகாலை முதல் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஸ்புத் தஹிர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் தேசிய புறனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிஸ்புத் தஹிர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் முக்கிய நபரான அகமது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் அகமது வீட்டில் இன்று காலை 6 மணியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மூவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இது குறித்த விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்ஐஏ தரப்பிலிருந்து வெளியிடப்படுமென தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

யுஜிசி விதிமுறைப்படி பணி வரன்முறை: கௌரவ விரிவுரையாளா்கள் வலியுறுத்தல்

காலமானாா் சித்த மருத்துவா் மு. சீனிவாசன்

வாழவந்தான்கோட்டை ஐஓபி வங்கிக் கிளை திறப்பு

திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது: சு. திருநாவுக்கரசா்

SCROLL FOR NEXT