திருப்பூரில் சுப்பராயன், நாகையில் வை. செல்வராஜ் போட்டி
திருப்பூரில் கே. சுப்பராயனும், நாகையில் வை. செல்வராஜும் போட்டியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகம் பாலன் இல்லத்தில் மாநிலக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது
இக்கூட்டத்துக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அறிவித்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை. செல்வராஜும், திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயனாயும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடவுள்ளதாக முத்தரசன் அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்திய கம்யூ. கட்சியின் சார்பில் நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை. செல்வரா போட்டியிடும் வை. செல்வராஜ் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12 ஆண்டுகளாக செயல்பட்டவர் என்று முத்தரசன் தெரிவித்தார்.
திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இந்திய கம்யூ. வேட்பாளர்களை மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அறிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.