தமிழ்நாடு

பிரதமர் மோடியின் மீது தேர்தல் விதிமீறல் புகார்

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வாகனப் பிரசாரத்தில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையருக்கு இந்திய கம்யூ. கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் திங்கள்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற வாகனப் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த வாகனப் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றுள்ள்னர்.

பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வாகனப் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்றும், எனவே பாஜகவினர் மற்றும் பிரதமர் மோடியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய கம்யூ. சார்பில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வாகனப் பேரணி கோவை சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று இறுதியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT