தமிழ்நாடு

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி - சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

DIN

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, இன்றிரவு போட்டி முடிந்ததும், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசன் சென்னையில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (மார்ச் .26) சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு 11.20 மற்றும் 11.45 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரிக்கு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில்,10.40 மற்றும் 11.05 மணிக்கு வேளச்சேரியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு ரயில் புறப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரசம்பவம் டிரெய்லர்!

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

SCROLL FOR NEXT