கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர்.

DIN

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதில், தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் 97.42 சதவிகிதம் தேர்ச்சியுடம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் 97.25 சதவிதத்துடன் 3-வது இடத்தையும், கோவை மாவட்டம் 96.97 சதவிதத்துடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் 90.47 சதவிகிதம் பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT