உதகை மலை ரயில் சேவை. 
தமிழ்நாடு

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

DIN

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வரும் 20ஆம் தேதி வரை மலை ரயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று(மே 18) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் மே 19, 20 ஆகிய நாள்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT