கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொடரும் பட்டாசு தீ விபத்துகள்: விராலிமலை அருகே ஒருவர் பலி

விராலிமலை அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று(மே 20) பிற்பகல் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் கார்த்திக்ராஜா (வயது 27) சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், இவ்விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சிவநேசன் என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகே தனியார் பட்டாசு ஆலைக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

கடந்த மே 9 ஆம் தேதி சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

SCROLL FOR NEXT