விழுப்புரம் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை
விழுப்புரம் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
விழுப்புரம் வட்டம், வளவனூர் அடுத்த அனுச்சம்பாளையம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி சகுந்தலா(60).
கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சகுந்தலா கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வீட்டினுள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
Advertisement
Advertisement
தகவலறிந்த விழுப்புரம் டிஐஜி திஷா மித்தல், எஸ்.பி. தீபக்சிவாச் மற்றும் வளவனூர் போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வளவனூர் போலீஸார் கொலையான பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்குகாக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சகுந்தலா நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.