மின் தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் 32,595 மெகாவாட்டில் இருந்து 36,671 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
புதிய 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள்.
புதிய 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 50% குறைக்கப்பட்ட வலையமைப்பு கட்டணத்தினால் 3.11 இலட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளது.
மின் பிரச்னையை தீர்க்கும் மின்னகம் எண்: 94987 94987.
இதன்மூலம் 23,97,957 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம் என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அண்மையில் மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.