திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு! 2 மாணவிகள் மயக்கம்
திருவொற்றியூரில் உள்ள பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவால் மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.
திருவொற்றியூரில் உள்ள பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவால் மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பாக வாயு கசிவு ஏற்பட்டு 35-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்ததில் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.
Advertisement
Advertisement
இதையடுத்து பள்ளியும் மூடப்பட்டது. 10 நாள்களுக்குப் பிறகு இன்று(திங்கள்கிழமை) மறுபடியும் திறக்கப்பட்டது.
இன்று காலை வழக்கம்போல் பள்ளியில் செயல்பட்டு வந்த நிலையில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அந்த 2 மாணவிகளின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் ஆய்வகத்தில் இருந்து இந்த வாயு காசி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல, தனியார் பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் கேஸ் நிறுவனம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.